தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!! 

Photo of author

By Rupa

தாழ்த்தப்பட்ட மக்கள்.. நானும் அவர்களும் ஒன்றா!! திமுக எம்பி தயாநிதி மீது அதிரடி வழக்கு பதிவு!!

கடந்த அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ் யிடம் திமுக எம்பிக்கள் பொதுமக்களின் தொகுதிவாரியான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கும் வகையில் மனு கொடுக்க சென்றனர். சண்முகம் ஐஏஎஸ் யிடம் மனு கொடுத்துவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து வெளியேறிய எம்பிக்கள் அவர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குற்றச்சாட்டை வைத்தனர்.

குறிப்பாக தலைமைச் செயலாளர் எங்களை பார்த்து “திஸ் இஸ் த ப்ராப்ளம் வித் யூ பீப்பிள்” என்று கூறியதாக டி ஆர் பாலு தெரிவித்திருந்தார். மேற்கொண்டு இதற்கு அர்த்தத்தை விளக்குமாறும் தயாநிதி யிடம் கூறினார். தயாநிதி இதற்குரிய அர்த்தத்தை, தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒப்பிட்டு பேசினார். இவ்வாறு பேசியது அச்சமயத்தில் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அதுமட்டுமின்றி தயாநிதி பேசியது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து இது குறித்த சர்ச்சை ஓங்கிய நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் என பேசியது யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை அவ்வாறு எங்களை நடத்தினார் என்று தான் கூற வந்தேன் என மன்னிப்பு கோரி பதிவு ஒன்றை தனது பக்கத்தில் போட்டார். எப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் என்று தயாநிதி கூறலாம், என அவர் மீது கோவை மாவட்டத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது தற்பொழுது சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தயாநிதி மாறன் நேரில் ஆஜராக இருக்குமென கூறுகின்றனர்.