வரதட்சணை கொடுமைகள்!! கடந்த 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை!!

Photo of author

By Preethi

வரதட்சணை கொடுமைகள்!! கடந்த 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை!!

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் வரதட்சனை கொடுமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டுள்ளது. நன்கு படித்த பெண்கள் கூட இந்த வரதட்சணை கொடுமைக்கு தள்ளப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களில் கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இரண்டு கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கொல்லம் அஞ்சல் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் உத்ரா, பறக்கோடு பகுதியை சேர்ந்த சூரஜ் ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது 112 சவரன் தங்க நகை மாருதி சுசுகி பெலினோ கார் ஆகிய பலவிதமான வரதட்சனை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வரதட்சனை போதாது என மாதந்தோறும் பெண் வீட்டாரிடம் இருந்து பணம் வாங்கி உள்ளார் சூரஜ். மேலும் சூரஜ் தனது மனைவியை கொலை செய்துவிட்டு வேரோடு திருமணத்தை செய்ய திட்டம் தீட்டினார் முதலில் தனது வீட்டிற்கு பாம்பை விட்டு மனைவியை கடிக்க வைத்தார் அதில் அவர் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாம்பு கடித்து சிகிச்சைக்குப்பின் தனது தாய் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க கரு நாகப்பாம்பு டன் சென்றால் சூரஜ். மனைவியின் வீட்டிற்கு சென்று மீண்டும் பாம்பு கடிக்க வைத்து மனைவியை கொலை செய்தார் சூரஜ். போலீசிடம் வசமாக சிக்கிய சூழல் கடந்த ஆண்டு அவர் சிறையில் உள்ளார். அதேபோல் சென்ற ஜூன் மாதம் 21ஆம் தேதி கொல்லம் நிலம் மேடு பகுதியில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் மனைவி விஸ்மயா மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு பாத்ரூமில் சடலமாக தொங்கிய விஸ்மயாவை மீட்டு, பின் வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையின் போது விஸ்மாயாவை அவரின் கணவர் கிரண்குமார் தாக்கிய புகைப்படஙகள் மற்றும் விஸ்மாயா தனது உறவினர்களிடம் நடத்திய வாட்ஸ்அப் சாட்டிங் ஆகியவை போலீசுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிரண் குமார் கைது செய்யப்பட்டார்.மேலும் இது போன்ற பல சம்பவங்கள் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் வரதட்சனை கொடுமை தாங்காமல் தற்கொலை மற்றும் கொலைகளால் கிட்டத்தட்ட 66 பெண்கள் உயிர் இழந்து உள்ளனர். சராசரியாக பத்து பெண்களுக்கு திருமணம் நடந்தால் அதில் ஏழு பெண்கள் வரதட்சனை கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.2016 முதல் கடந்த மதம் வரை 15,143 வழக்குகள் கேரளத்தில் பதிவாகியுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அமைச்சரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான வீணா ஜார்ஜ் கேரளத்தின் அனைத்து மாவட்டத்திலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார் .

இது தொடர்பாக அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் ஏரியா அலுவலகங்களில் மட்டுமே அதிகாரிகள் இருந்தனர். தற்போது14 மாவட்டங்களிலும் தனித்தனி அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மாவட்ட அலுவலர்கள் மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் வரதட்சணை தடுப்பு இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். கல்லூரிகள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.