வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

0
329
#image_title

வரதட்சணை கொடுமை – மருமகள் தற்கொலை, மாமனார் மாமியாரை எரித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவரது பெற்றோர் ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62). அன்ஷூ கேசர்வானிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அன்ஷிகா(21) என்னும் பெண்ணுடன் திருமணம் அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே மணப்பெண்ணான அன்ஷிகாவை அன்ஷு கேசர்வானியும், அவரது பெற்றோரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அன்ஷிகா நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அன்ஷிகாவின் மரண செய்தி செய்தி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அன்ஷு கேசர்வானி வீட்டிற்கு சென்று தங்கள் மகளின் நிலை அறிந்து அழுது புலம்பியுள்ளனர். பின்னர், அன்ஷு கேசர்வானி குடும்பத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினர்கள் மத்தியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக உயிரிழந்த அன்ஷிகாவின் உறவினர்கள் அன்ஷு வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்து தீயில் சிக்கிய 5 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். எனினும், இந்த சம்பவத்தில் அன்ஷிகாவின் மாமனார் மாமியாரான ராஜேந்திர கேசர்வானி(64), மாமியார் ஷோபா தேவி(62) உள்ளிட்ட இருவரும் முற்றிலுமாக தீயில் கருகியதால் உயிரிழந்தனர். அவர்களது உடல் தற்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article1986 தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக கட்சி! எம்ஜிஆரின் கோபத்துக்கு பயந்து படத்தின் பெயரை மாற்றிய கமல்!
Next articleதமிழக முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படங்களை அச்சிட்ட பனியன்கள் பறிமுதல் – ராமநாதபுரத்தில் பரபரப்பு சம்பவம்!!