தற்போதைய ராஜ சபா உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான திரு அன்புமணி ராமதாஸ் மக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் நிலையை தலைகீழாக மாற்றவும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள முத்துரங்கன் சாலையில் பா.ம.க சார்பில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முத்துவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும், தன் கால் படாது என சபதம் எடுத்ததோடு, சொன்ன சொல் தவறாமல் இதுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் மருத்துவர் ஐய்யா ராமதாஸ் என்றார்.
நாட்டிலேயே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மூன்று இட ஒதுக்கீட்டையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையையும் பெற்றுத் தந்த ஒரே தலைவர் மருத்துவர் ஐய்யா ராமதாஸ் மட்டுமே என்றும் அன்புமணி தெரிவித்தார்.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பா.ம.க.வுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், அணு உலை உள்ளிட்ட திட்டங்களை நிறுத்த பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டு இருந்த அன்புமணி, மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேல் தனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையான மருத்துவர் ஐய்யா இராமதாஸ் அவரை பெருமையாக பார்க்கிறேன் என்று அன்புமணி குறிப்பிட்டார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.