கடுகு இவ்வளவு நோயை தீர்க்குமா? என்ன ஒரு அதிசயம்!

0
87

நமது வீட்டிலே அனைத்திற்கும் மருந்துகள் உண்டு. அதில் கடுகும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகில் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை சேர்க்கிறார்கள்.

வெப்பம் அதிகமான கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வெப்ப கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

கொழுப்புக்கள் இரண்டு வகை அதில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், அதிக உடல் பருமன் உள்ளவர்களை பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் விட்டமின் பி-3 ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்க கூடியது, ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.

சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.
பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. இப்படி பட்ட கடுகு அளவில் சிறியதாக இருந்து எவ்வளவோ வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது கடுகு ஆகும். இனி தவறாமல் அனைவரும் கடுகை சமையலில் சேர்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K