யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு

Photo of author

By Parthipan K

யாரும் இனி மதம் மாறக்கூடாது! எல்லோரும் சத்தியம் பண்ணுங்க- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு

தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம் என்னும் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றியது. இதற்கு கைமாறாக தேவேந்திரகுல சமுதாயத்தின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் மோடி அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேவேந்திரகுல சமுதாயத்தை முன்னிட்டு முன்னிறுத்தி அரசியல் செய்யும் புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது நாமெல்லாம் இந்துக்கள் இனி நம் சமுதாயத்தை சார்ந்த எவரும் மாற்று மாதமான முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்துவ மதத்திற்கும் மாறக்கூடாது. இதை இங்கு வந்துள்ள அனைத்து தொண்டர்களும் சத்திய பிரமானம் செய்து கொள்ளுங்கள் என்று பேசியிருந்தார்.

மேலும் முன்பு தான் பட்டியல் இனத்தில் இருந்தோம். அப்போது தாழ்வு மனப்பான்மை காரணமாக பலர் மாற்று மதத்திற்கு மாறினார்கள். தற்பொழுது நாம் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேறி விட்டோம். இனி யாரும் மாற்று மதத்திற்கு செல்ல அவசியமில்லை என்று பேசியிருந்தார். நேரடியாக பிஜேபியால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என அறிந்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கு அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கணிசமான ஓட்டுகளை வாங்க பிஜேபி காய் நகர்த்தி வருகிறது என அரசியல் ஆர்வலர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.