தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!

Photo of author

By Parthipan K

தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும்,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து குறுக்கு வழிகளில் கிராமங்களுக்கு சென்றவர்கள் தங்களை சோதனை செய்து கொள்ளாததும், தனிமைப் படுத்திக் கொள்ளாததும் தான் கொரோனா அதிகம் பரவ காரணம் ஆகும்.

மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது. கிராமங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். புதிதாக ஊருக்கு வருபவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும்! என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

https://twitter.com/drramadoss/status/1286324090932834305

https://twitter.com/drramadoss/status/1286324714575523841

ஆரம்பம் முதலே தமிழ்நாட்டில் அதிக அளவில் சோதனைகளை நடத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது