நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்

0
194
Dr Ramadoss
Dr Ramadoss

நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள்! உண்மையை போட்டுடைத்த மருத்துவர் ராமதாஸ்

 

தமிழ் நாடு நாள் கொண்டாடுவது குறித்து திமுக தரப்புக்கும், அதன் எதிர் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியை தான் தமிழ் நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதுவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய #தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம்.

 

தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 01.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி தான் சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Previous articleஉதயகுமார்: முன்கூட்டியே எச்சரித்த எடப்பாடி.. கண்டுகொள்ளாத ஸ்டாலின்! எங்க தலைவர் கூறியதை அப்போவே கேட்டிருக்கலாம்!
Next articleநியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா