நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா

0
71

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் போராடி வெற்றி பெற்றது இங்கிலாந்து.

குருப் ஏ பிரிவில் இடம்பெற்ற அணிகளான நியுசிலாந்து மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். நியுசிலாந்து அணியில் லோக்கி பெர்குஸன் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணிக்கு நல்ல தொடக்க அமையவில்லை. இதனால் ரன்களை சேர்க்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணற, ஒரு கட்டத்தில் கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆனாலும் முக்கியமானக் கட்டத்தில் இருவரும் அவுட் ஆனதால் அணி மறுபடியும் தடுமாற்றத்தில் விழுந்தது.இதனால் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நியுசிலாந்து அணியின் பிலிப்ஸ்  அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் நியுசிலாந்து அணி நீடிக்க, ஆஸி அணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆஸி அணியின் அரையிறுதிக் கனவுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.