டாக்டர் சீக்ரெட்! தினமும் 60 நிமிடம் இதை செய்தால்.. நோய் நொடியின்றி 100 வயது வரை வாழலாம்!!

Photo of author

By Divya

டாக்டர் சீக்ரெட்! தினமும் 60 நிமிடம் இதை செய்தால்.. நோய் நொடியின்றி 100 வயது வரை வாழலாம்!!

Divya

இந்த காலத்தில் நோய் நொடியின்றி 50 வயது வரை வாழ்வதே அதிசயமாக இருக்கிறது.ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கம் மற்றும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கைமுறையால் குழந்தைகளே நோயோடு தான் பிறக்கின்றனர்.

ஆரோக்கியம் இல்லாத மசாலா உணவுகளுக்கு முக்கியத்துவம் தரும் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுவதில்லை.இதனால் பல வியாதிகளுடன் சுற்றி திரிகின்றோம்.நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் நமது ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

உடல் மட்டுமின்றி நமது மனதும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பு நம்மை அண்டாமல் இருக்கும்.ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை பின்பற்றுபவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தியானம்,யோகா,உடற்பயிற்சி போன்றவை இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக விளங்குகிறது.தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடைபயிற்சி,எளிமையாக உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:-

1)தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் இதய தசை பலப்படும்.

2)தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் இரத்த ஓட்டம் மேம்படும்.

3)நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

4)இதய நோய் அபாயம் குறைய தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.

5)மன ஆரோக்கியம் மேம்பட உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

6)உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

7)உடல் மற்றும் மூளை புத்துணர்வுடன் இருக்க உடற்பயிற்சி செய்யலாம்.

8)தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

9)தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் இளமை அதிகரிக்கும்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

10)உடற்பயிற்சி மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வியர்வை மூலம் வெளியேற்றிவிடலாம்.