உடலுக்கு தூணாக திகழும் எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.எலும்பின் வலிமையை அதிகரிக்க ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நாம் வாழ்நாள் ,முழுவதும் நிற்க,நடக்க,ஓட,அமர என்று துடிப்பாக செய்லபட எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும்.எலும்பு வலிமைக்கு கால்சியம் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எலும்புகளின் வலிமைக்கு 1000 முதல் 1300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.ஆனால் கால்சியம் பற்றாக்குறை காரணமாக மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,இடுப்பு வலி,முதுகு தண்டு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
கடந்த காலங்களில் வயதானவர்கள் மட்டுமே எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது பின்பற்றி வரும் மோசமான உணவுப் பழக்கத்தால் இளைய தலைமுறையினர் எலும்பு சார்ந்த பிரச்சனைகளை அனுப்பகின்றனர்.
எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட காரணங்கள்:
*கால்சியம் பற்றாக்குறை
*மோசமான உணவுப் பழக்கம்
*உடல் பருமன்
*வைட்டமின் டி குறைபாடு
*போரான் சத்து குறைபாடு
கால்சியம் பற்றாக்குறையை போக்கும் உணவுகள்:
1)பால்
2)கேழ்வரகு
3)பேரிச்சை
4)முந்திரி
5)பாதாம் பருப்பு
6)பிஸ்தா பருப்பு
7)கருப்பு உளுந்து
8)கீரை வகைகள்
இந்த உணவுப் பொருட்களில் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.எலும்பு வலிமைக்கு கால்சியம் சத்து மட்டும் இருந்தால் போதாது.கால்சியம் சத்துடன் வைட்டமினி டி சத்தும் அவசியமாகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த வைட்டமின் சத்து எந்த உணவில் நிறைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைட்டமின் டி பற்றாக்குறையை போக்கும் உணவுகள்:
1)சோயா பால்
2)பாதாம் பருப்பு
3)ஓட்ஸ்
4)ஆரஞ்சு பழச்சாறு
5)கெளுத்தி மீன்
6)முட்டை
7)ஹார்ட் லிவர் எண்ணெய்
8)காளான்
9)மத்தி மீன்
10)தானியங்கள்
இந்த உணவுகளை உட்கொள்ள முடியாதவர்கள் காலை நேர இளம் வெயிலில் சூரிய ஒளி படும் படி சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள்.சூரிய ஒளியில் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது.சூரிய ஒளி நம் மீது படும் பொழுது வைட்டமின் டி சத்து கிடைக்கிறது.கால்சியம்,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்களுடன் போரான் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.35+ கடந்தவர்கள் எலும்பு வலிமையை அதிகரிக்கும் உணவுகளை அதிகளவு உட்கொள்ள வேண்டும்.