தமிழக அமைச்சரவையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! ஸ்டாலின் முடிவால் திக்குமுக்காடி போன மினிஸ்டர்ஸ்!
தமிழக அமைச்சரவையில் இம்மாதம் மாற்றம் ஏற்பட போகிறது என்ற தகவல் பரபரப்பாக வந்த சூழலில் 35 வது அமைச்சராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுள்ளதை அடுத்து மற்ற அமைச்சர்களுக்கும் அவர்களின் முந்தைய பதவியானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் பல நாட்களாக எனக்கு வேறு ஒரு துறை வேண்டும் என்று கேட்டு வந்த கூட்டுறவுத்துறை ஐ பெரியசாமிக்கு தற்பொழுது ஊரக வளர்ச்சி அமைச்சராக பதவி மாற்றம் செய்துள்ளனர்.
அதேபோல பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பதவியாக காதி கிராம நலத்துறை ஆனது வழங்கியுள்ளனர்.
அதேபோல வீட்டு வசதி துறை அமைச்சராக உள்ள முத்துசாமிக்கு அவர் துறையுடன் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்ட உள்ளது.
வனத்துறை அமைச்சர் ஆக இருந்த ராமச்சந்திரனுக்கு மாற்றுத் துறையாக சுற்றுலாத்துறை வழங்கியுள்ளனர்.அதுவே சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு தற்பொழுது வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி பதவி வகித்த நிலையில் முன்வருந்த அமைச்சருக்கு சுற்றுச்சூழல் துறை குறித்து ஒதுக்கீடு செய்துள்ளனர்.
வீட்டு வசதி நகர்ப்புற மேம்பாட்டு துறையை அமைச்சர் எஸ் முத்துசாமிக்கு ஒதுக்கி உள்ளனர். அதேபோல அமைச்சர் கார்த்தி கிராம தொழில் வாரியம் பூதானம் மற்றும் அம்மாச்சராக இருந்ததை அடுத்து தற்போது ஜவுளி துறையை ஒதுக்கீடு செய்துள்ளனர். முன்பு கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி பார்த்து வந்த புள்ளியல் துறை தற்பொழுது பழனிவேல் தியாகராஜன் வசம் கொடுத்துள்ளனர்.