ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
88
Warning men, ban on smoking cigarettes! Action order issued by the government!
Warning men, ban on smoking cigarettes! Action order issued by the government!

ஆண்களே எச்சரிக்கை சிகரெட் புகைக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த அறிவிப்பில் இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது.அதனால் தடை செய்து ஆணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.

நிக்கோட்டின்,நீர் கரைகின்ற மற்றும் சுவையூட்டும் பொருட்களை கலந்து நீராவியாக உள்ளிழுப்பதுதான் வேப்பிங் என கூறப்படுகின்றது.இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் 2025 ஆம் ஆண்டு வருவதற்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.அதனால் நியூசிலாந்து இளைஞர்கள் சிகிரெட் பிடிப்பதற்கும் அதனை வாங்குவதற்கும் வாழ்நாள்தடை விதிக்க புதிய சட்டம் ஒன்று நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 1 2009 ஆம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு பிறந்த யாரும் புகையிலை விற்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் சிகிரெட் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதற்கு முன்னதாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 6000 ல் இருந்து 600 ஆக குறைய வாய்ப்புள்ளது.மேலும் புகையிலையில் பயன்படுத்தப்படும் நிகோடின் அளவை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K