பத்திரப்பதிவில் அதிரடியான திருத்தம்!! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது போலியாக பத்திரம் தயாரிப்பது பெரும்பாலும் நடந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காகத்தான் பத்திரப்பதிவிற்கு ஆதார் கார்டுகள் கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் உயிரிழந்த ஒருவரின் சொத்துக்களை போலியாக வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொள்கிறார். இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். எனவே, இவர்கள் மீது பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை தமிழக அரசு முதன் முறையாக மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் வரவேற்றது. இருப்பினும் இந்த போலியான பத்திரங்களை ரத்து செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது.
எனவே, இதற்காக பத்திரப்பதிவு விதிமுறைகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட இருக்கிறது என்று தவல்கள் வெளியாகி உள்ளது. வேறு ஒருவரின் சொத்தை அவருக்கே தெரியாமல் போலியாக பத்திரம் தயாரித்து பதிவு செய்து விடுகிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பதிவுத்துறை அதிகாரி, ஒருவர் ஏராளமான பத்திரங்களை விற்கிறார் என்றால், அதில் ஏதேனும் ஒன்று தான் போலியானதாக இருக்கும்.
ஆனால் ரத்து செய்யும் போது அனைத்து பத்திரங்களும் ரத்தாகி பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால்தான் மோசடி செய்த ஒரு பத்திரத்தை மட்டும் ரத்து செய்ய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.