Breaking News

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்…

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

 

சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.இதனால் தங்கம் விலை மீண்டும் 45 ஆயிரத்தைக் கடந்து விடுமோ என்று நகைப்பிரியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44520 என்று விற்பனையானது.

 

அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.44,400-க்கும், ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.48,440 கு விற்பனையாகின்றது.

 

அதேசமயம், வெள்ளி விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலையில் நீடிக்கின்றது. அதன்படி ஒரு கிராம் ரூ.80கும், ஒரு கிலோ ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.