திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!!

0
189
Draupadi Murmu will arrive in Puducherry tomorrow! MLAs eagerly waiting to see him !!
Draupadi Murmu will arrive in Puducherry tomorrow! MLAs eagerly waiting to see him !!

திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!!

தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை புரிகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். தேர்தலில் இரண்டு வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை சந்தித்து அவர்களின் ஆதரவு திரட்டி வருகின்றார்கள்.இதனையொட்டி பாஜக பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வரும் ஜூலை 2ஆம் தேதி அன்று புதுவைக்கு வரவுள்ளார்.

டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு திரவுபதி முர்மு வருகிறார். அவரை பாஜகவினர் வரவேற்க ஆர்வமாக உள்ளார்கள்.அதைதொடர்ந்து திரவுபதி முர்மு அங்கிருந்து ஹோட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பாஜக கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற இருக்கும் கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

எதிர்கட்சி அணியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக நீதி பற்றி பேசும் திமுகவினர் தங்களை சந்திக்கவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.மலைவாழ் பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்காததால் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச அதற்கான தகுதியில்லை.

நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டில் முதல்முறையாக மலைவாழ் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் குடியரசுத்தலைவருக்கு வேட்பாளராகியுள்ளார். பாஜக வேட்பாளர் நாளை மறுநாள் காலை 10 மணி அளவில் புதுவைக்கு வர இருக்கிறார்.ஹோட்டலில் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில் திரவுபதி முர்மு பங்கேற்று பேசுகிறார். இதில் முக்கியமான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றார்கள். அதில் திரவுபதி முர்மு வருகை புதுவை வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Previous articleபொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்
Next articleஇந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!