திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

0
178

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட்ட திரெளபதி படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு யாரும் எதிர்பாராத அளவிற்கு பொது மக்களின் வரவேற்பு கிடைத்தது. திரெளபதி டிரெய்லர் தற்போது 40 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

தனக்கு பிடித்த அரசியல் தலைவர், சமுதாய தலைவர், சினிமா நடிகர்களை பேனரில் அச்சிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் திரெளபதி படத்தின் போஸ்டரை திமுக கட்சியை சேர்ந்த ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் முழுவதுமாக ஒட்டியுள்ளார். வாகனத்தின் முன்பு திமுக கட்சி கொடியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், சிலர் தனது இரு சக்கர வாகனங்களில் முன்பக்கத்தில் திரெளபதி படத்தின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டி தெறிக்க விடுகிறார்கள். பொங்கல் நிகழ்வாக திரெளபதி பெயரையும் மஞ்சள், சிவப்பு நிறத்தில் கோலமாக போட்டு வருகிறார்கள்.

இப்படி திரெளபதி படத்தின் ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் டிரெய்லரில் வரும் வசனங்களையும் படத்தின் இயக்குனரையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

படத்திற்கு எதிராக பல்வேறு கேள்விகளும், விமர்சனமும் வந்த நிலையில், தனது பேட்டி மூலமாக அனைத்து கேள்விகளுக்கும் படத்தின் இயக்குனர் மோகன்.ஜி அசராமல் பதிலளித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திரெளபதி பட முன்னோட்டம் சிறப்பான வரவேற்பு பெற்றதை அடுத்து, படம் எப்போது வெளிவரும் என்பது பொதுமக்களின் ஆவலாக உள்ளது.

Previous articleதிமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!
Next articleஎம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!