சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம் – முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் முக ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல , சொல்லாததையும் செய்யும் திராவிட மாடல் ஆட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆட்சியின் சாதனைகளை சொன்னால் நேரம் போதாது.
இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொன்னேன்.
கொளத்தூர் தொகுதி வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டு அண்ணா , கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி சொன்னேன்.
வாக்களிக்க தவறியவர்கள் வருந்தும் அளவு , வாக்களித்தவர்கள் பெருமைப்படும் அளவிற்கும் எனது ஆட்சி இருக்கும் என்றும் கூறினேன்.
நம்பர் 1 முதல்வர் என பாராட்டை பெற்றாலும் , நம்பர் 1 தமிழ்நாடு எனும் சூழலை உருவாக்குவேன் என்று கூறினேன். அந்த சூழல் இப்போது வந்துள்ளது.