ஒரு பட்டாம் பூச்சி போன்ற வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி கழுத்தின் முன் பக்கத்தில் இருக்கின்றது.உடல் உறுப்புகள் சீராக இயங்க தைராய்டு சுரப்பி நல்லபடியாக சுரக்க வேண்டும்.தைராய்டு சுரப்பியானது நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை சரியாக செயல்பட செய்கிறது.
ஆனால் தைராய்டு சுரப்பி ஹார்மோன் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சுரந்தால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.இந்த தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை பெரும்பாலும் பெண்களே சந்திக்கின்றனர்.
தைராய்டு சுரப்பி குறைபாடு ஏற்பட்டால் பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல் வரும்.கருத்தரித்தலில் தாமதம் ஏற்பட இது முக்கிய காரணமாக உள்ளது.தைராய்டு சுரப்பியில் மாற்றம் ஏற்பட முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான்.அதிக கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் தைராய்டு சுரப்பியின் அளவு அதிகரித்துவிடும்.
தைராய்டு பாதிப்பு ஏற்பட்டால் இளநரை,முடி உதிர்வு,உடல் சோர்வு,பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படும்.தைராய்டு உள்ளவர்கள் அதில் இருந்து மீள சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பருகி வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.
2)இஞ்சி தேநீர்
ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி ஒரு துண்டு இஞ்சி தட்டி போட்டு கொதிக்க வைத்து பருகினால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.
3)நெல்லிக்காய்
ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு சேர்த்து பருகி வந்தால் தைராய்டு பாதிப்பு குணமாகும்.
4)தேங்காய் பால்
தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் பருகி வந்தால் தைராய்டு பாதிப்பில் இருந்து சீக்கிரம் மீண்டுவிடலாம்.தினசரி உணவில் தேங்காய் பால் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.