ஆரோக்கிய பானங்கள் மூலம் நோய் பாதிப்புகளை குணபடுத்திக் கொள்ள முடியும்.உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொத்தமல்லி தழையில் ஜூஸ் செய்து பருகலாம்.இந்த கொத்தமல்லி ஜூஸ் பல ஆரோக்கியத்தை கொண்டிருப்பதால் மருத்துவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பருக பரிந்துரைக்கின்றனர்.
இளமை காலத்தில் இதய நோய்,பிபி,கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க இந்த ஜூஸ் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி
2)புதினா தழை – சிறிதளவு
3)எலுமிச்சம் பழம் – பாதியளவு
4)இஞ்சி – ஒரு துண்டு
செய்முறை விளக்கம்:-
1.முதலில் அரை கைப்பிடி கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு புதினா தழையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு அலசிக் கொள்ள வேண்டும்.
2.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட வேண்டும்.
4.விருப்பப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சரியாகும்.இதய ஆரோக்கியம் மேம்பட இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைய இந்த ஜூஸ் பருகலாம்.
5.கொத்தமல்லி மற்றும் புதினா குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இதை கோடை காலத்தில் ஜூஸாக பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.