உடல் சூடு சார்ன்னு குறைய மேனி கலராக கேரட் மில்க் ஷேக் செய்து குடியுங்கள்!!

Photo of author

By Divya

உடல் சூடு சார்ன்னு குறைய மேனி கலராக கேரட் மில்க் ஷேக் செய்து குடியுங்கள்!!

வெயில் காலத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சனை உடல் சூடு.இதனால் முகம்,முதுகில் கொப்பளங்கள் ஏற்படுதல்,கண் எரிச்சல்,வயிறு தொர்டர்பான உபாதைகள் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அதேபோல் மற்றொரு பிரச்சனையாக இருப்பது சருமத்தின் நிறம் மாறுதல்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் நம் முகத்தின் நிறமே மாறி அழகு குறைந்திருக்கும்.

உடல் சூடு குறைய மற்றும் மேனியின் நிறம் மற்றும் அழகு அதிகரிக்க கேரட்டில் சுவையான மில்க் ஷேக் தயாரித்து குடியுங்கள்.கேரட் கோடை கால நோய் பாதிப்பில் இருந்து உடலை ஆரோக்கியமான முறையில் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

1)கேரட்
2)பாதாம் பருப்பு
3)முந்திரி
4)பால்
5)நாட்டு சர்க்கரை
6)ஏலக்காய் தூள்
7)பிஸ்தா பருப்பு

கேரட் மில்க் ஷேக் செய்முறை:

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கிண்ணம் எடுத்து அதில் 4 பாதாம்,4 முந்திரி மற்றும் 4 பிஸ்தா பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு மீடியம் சைஸ் கேரட் எடுத்து தோல் நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை ஒரு காய்கறி சீவல் கொண்டு கேரட்டை சீவி வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 03:

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் சீவி வைத்துள்ள கேரட்,ஊறவைத்த பாதாம்,முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பை போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் காய்ச்சாத பால் ஒரு டம்ளர்,3 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை,1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மைய்ய அரைக்கவும்.பால் தேவைப்பட்டால் மீண்டும் ஊற்றி மென்மையாக அரைத்து எடுக்கவும்.

ஸ்டெப் 04:

இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றினால் சுவையான ஆரோக்கியமான கேரட் மில்க் ஷேக் தயார்.