உடம்பில் ரத்தம் இல்லையா?? பாலுடன் இத சேர்த்து குடிங்க! பல பிரச்சனை தீரும்ங்க!!

Photo of author

By Kowsalya

இந்த காலகட்டத்தில் நாம் எவ்வளவு உணவுகள் எடுத்துக் கொண்டால் சத்தான உணவுகள் உடலில் ரத்தத்தை ஊறவைக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நமக்கு கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது. சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது தான் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

 

பல சத்துக்கள் நிறைந்த ஒரு பழம் என்றால் பேரிச்சம் பழம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரீச்சம் பழத்தில் தாமிரம், பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் B6 மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

 

பாலுடன் பேரிச்சம் பழத்தை கலந்து கொடுத்து வந்தால் என்ன நன்மைகள் உள்ளன என்பதை பற்றி பார்க்கலாம்.

 

செய்முறை:

 

1. முதலில் இரண்டு பேரீட்சை பழங்களை எடுத்து கொட்டையை நீக்கிக் கொள்ளுங்கள்.

2. நன்கு சூடாக இருக்கும் பாலில் 2 பேரிச்சை பழங்களைப் போடவும்.

3. அந்த சூடான பாலிலே பேரீச்ச பழம் வேக வேண்டும்.

4. சுவைக்காக தேன் சேர்க்கலாம் இல்லை எனில் பேரிச்சபழம் சுவையை போதும் என்றால் விட்டுவிடலாம்.

5. நன்கு ஊறிய பின் கலந்து குடிக்கலாம்.

 

பலன்கள்:

 

1. உறங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து ஆணும் பெண்ணும் குடித்து வரும் பொழுது உடலில் ரத்தம் ஊறும். ரத்த சோகை மற்றும் சோம்பல் உள்ளவர்கள் இதை தினமும் குடிக்க வேண்டும்.

2. பாலில் பேரிச்சம் பழத்தை தினமும் கலந்து குடிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை நன்றாக ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

3. ரத்தசோகை மாதவிலக்கு மற்றும் மாதவிடாய் ஏற்படும் பொழுது அதிக ரத்தப்போக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் பேரிச்சபழம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

4. இதனை குடிப்பதனால் எலும்புகள் வலுவாகும். சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி அடையும்.

5. ஆண் பெண் இருவருக்கும் உள்ள மலட்டுத்தன்மை நீங்கும்.

6. சளி இருமல் தொல்லை உள்ளவர்களும் இந்த பாலை குடிக்கலாம்.

7. மலச்சிக்கல் சரியாகும்.

 

இவ்வாறு அத்தனை நன்மைகளை உள்ளடக்கிய பேரிச்சபழம் மற்றும் பால் இவை இரண்டும் உடலுக்கு ஏராளமான பலன்களை அள்ளித் தருகின்றன. அதனால் தினமும் இரவு படுக்கபோகும் முன் இதனை குடித்து வாருங்கள்.