1 நாளில் சளி அனைத்தும் அறுத்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் குடிங்க!!

0
281
#image_title

1 நாளில் சளி அனைத்தும் அறுத்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் குடிங்க!!

 

சளி வந்துவிட்டால் கூடவே இருமலலும் வந்துவிடும். சளி, இருமல் வந்துவிட்டால் சரியாக தூக்கம் வராது. சரியாக மூச்சு விட முடியாது. இன்னும் பல பிரச்சனைகள் நம் உடலுக்கு ஏற்படும்.

 

அந்த வகையில் பல பாதிப்புகளை நம் உடலுக்கு தரக்கூடிய இந்த சளி மற்றும் இருமலை ஒரே நாளில் சரி செய்ய எந்த மருந்தை தயார் செய்து எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* திப்பிலி

*.வெற்றிலை

* தேன்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முதலில் 5 திப்பிலியை இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 வெற்றிலையை எடுத்து அதிலிருந்து வெற்றிலை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேன் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும்.

 

தண்ணீர் கொதித்த பிறகு இதில் பொடியாக்கி வைத்துள்ள திப்பிலியை சேர்த்துக் கொள்ளவும். இந்த தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். நன்கு கொதித்தால் தான் திப்பிலியின் சத்துக்கள் இந்த தண்ணீரில் இறகும்.

 

5 நிமிடம் கொதித்த பிறகு இதை இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். சூடாகக் குடிக்க குடாது. ஆறிய பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

வடிகட்டி எடுத்து வைத்துள்ள திப்பிலி தண்ணீரில் வெற்றிலை சாறு மூன்று ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ளவும். அடுத்ததாக எடுத்து வைத்துள்ள தேனையும் இதில் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும் மருந்து தயார் ஆகிவிட்டது.

 

இதூ பயன்படுத்தும் முறை…

 

இருமல் மற்றும் சளி தொந்தரவு இருக்கும் பொழுது மூன்று நாள் தெடர்ந்து காலை மற்றும் மாலை என இரண்டு வேலை இந்த மருந்தை குடித்தால் இருமல் ஒரே நாளில் சரியாகிவிடும். சளி குணமடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.

 

இந்த மருந்தை பெரியவர்கள் ஒரு கிள்ஸ் அளவிற்கும் சிறியவர்கள்(6 வயதுக்கு மேல்) அரை கிள்ஸ் அளவிற்கும் குடிக்கலாம். இருமல் சளி இருக்கும் நேரங்களில்தான் இதை குடிக்க வேண்டும் என்று இல்லை. இந்த மருந்தை வாரம் ஒரு முறை குடித்து வந்தால் இருமல், சளி தொந்தரவு இருக்காது.

Previous articleஆண் பெண்ணின் அந்தரங்க பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் இது 1 கைப்பிடி போதும்!!
Next articleஏன் தினமும் பட்டாணி சாப்பிடணும் தெரியுமா!! தெரிஞ்சா இன்னைக்கு சாப்பிட ஆரம்பிப்பீங்க!!