ஒரு வாரம் இரவு தூங்கும் முன் நீரில் உப்பு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Photo of author

By Kowsalya

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து ஒரு வாரம் குடிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கிடைப்பதோடு, உடல் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வாரம் இந்த நல்ல பழக்கத்தை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல முடிவைப் பெறலாம்.

வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பது எப்படி?

தூங்கும் முன் வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதற்கான சிறந்த நேரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குடிப்பதால் உகந்த நன்மைகள் கிடைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்திற்கும் உகந்ததாக செயல்படும். இதனால் தான் பலர் இரவு நேரத்தில் குடிக்க தேர்வு செய்கிறார்கள்

உடல் வறட்சி தடுக்கப்படும்:

உப்பு நீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளுள் ஒன்று, இது உடலுக்கு தேவையான நீரேற்றத்திற்கு உதவி புரிந்து, உடல் வறட்சியைத் தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்களை வழங்கும்:

வெதுவெதுப்பான உப்பு நீரில் உடலுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றொரு சிறந்த வழியாக இது விளங்கும்

செரிமானம் மேம்படும்:

ஒரு வாரம் தொடர்ந்து வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடித்து வந்தால் பெறும் நன்மைகளுள் முக்கியமானது, செரிமான இயக்கம் மேம்படும்.

மெட்டபாலிசம் மேம்படும்:

ஒரு சிறப்பான உடல் வளர்சிதை மாற்ற முறையை வழங்குவதற்கு உப்பு நீர் உதவி புரியும். எனவே, இது நாம் உண்ணும் உணவை உடலுக்கு தேவையான ஆற்றலாக திறம்பட மாற்றும்.

நல்ல தூக்கம் கிடைக்கும்:

எப்போது உடல் நன்கு ரிலாக்ஸாகவும், மனம் நேர்மறையாகவும் இருக்கிறதோ, அப்போது நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

ஆர்த்ரிடிஸைத் தடுக்கும்:

வெதுவெதுப்பான உப்பு நீரைக் குடிப்பதால் பெறும் ஒரு முக்கியமான நன்மை, இன்று பலரும் அவஸ்தைப்படும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைத் தடுக்கிறது.

ஆரோக்கியமான சருமம்:

உப்பு நீரின் மற்றொரு அற்புதமான நன்மை, அது சருமத்தை மென்மையாக பட்டுப் போட்டு பராமரிக்க உதவும். ஏனெனில் பொதுவாக உடலில் போதுமான அளவு நீர் இருந்தால், சருமம் வறட்சியின்றி அழகாக காணப்படும்.

குறிப்பு:

1. அளவுக்கு அதிகமாக உப்பை நீரில் கலந்து விட வேண்டாம். அதிகப்படியான உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பு நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

2. டேபிள் உப்பிற்கு பதிலாக இயற்கை உப்பை பயன்படுத்தவும். டேபிள் உப்பில் பெரும்பாலும் பதப்படுத்தும் பொருட்கள் இருப்பதால், அவை ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக இருக்கலாம்.

3. ஒருவேளை உப்பு நீரால் குமட்டல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையை அனுபவித்தால், உடனே உப்பு நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. முக்கியமாக உப்பு காரணமாக கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், உப்பு நீர் குடிக்கக்கூடாது.