அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!
இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்சிஜனை எடுத்தும் செல்லும் செய்து வருகிறது.இந்த ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,மயக்கம்,கை கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
1)பீட்ரூட்
2)இஞ்சி
3)தேன்
ஒரு பீட்ரூட் கிழங்கின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி பீட்ரூட் துண்டுகளுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும்.பிறகு ஒரு கிளாஸிற்கு இந்த சாறை வடிகட்டி சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மளமளவென அதிகரிக்கும்.
1)பெரு நெல்லிக்காய்
2)எலுமிச்சை சாறு
முதலில் ஐந்து பெரு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுக்க வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி அரைத்த பெருநெல்லி சாற்றை அதில் கலக்க வேண்டும்.
அடுத்து அதில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி கலந்து குடித்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
1)பேரிச்சம் விதை பொடி
2)பசும் பால்
ஒரு கிளாஸ் அளவு பாலில் ஒரு தேக்கரண்டி பேரிச்சம் விதை பொடி சேர்த்து கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.
1)புதினா இலை
2)தேன்
100 கிராம் புதினா இலை எடுத்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடித்து தேன் சேர்த்து குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு மளமளவென அதிகமாகும்.
1)மாதுளம் பழம்
2)தண்ணீர்
ஒரு கப் மாதுளம் பழத்தை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும்.