இதனை 1 முறை குடியுங்கள் ஆயுசுக்கும் முதுகு மூட்டு வலிக்கு கால்சியம் மாத்திரை தேவையில்லை!! 

Photo of author

By Rupa

இதனை 1 முறை குடியுங்கள் ஆயுசுக்கும் முதுகு மூட்டு வலிக்கு கால்சியம் மாத்திரை தேவையில்லை!!

நமது உடல் மற்றும் மூட்டுகள் பலவீனமாக இருப்பதை உணர்ந்தால் நமது நமது உணவை சத்தானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு கால்சியம் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதை தடுப்பதுடன் உயர் ரத்த அழுத்தம் ஹீமோகுளோபின் குறைவு போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த பதிவில் வருவதை வாரம் ஒரு முறை சாப்பிட்டால் கூட மூட்டு மற்றும் முதுகு வலி எதுவும் உண்டாகாது.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு 2 ஸ்பூன்
ஆப்பிள் 1
மக்கானா(தாமரை விதை)- சிறிதளவு

ராகி மாவானது மற்ற சிறுதானியங்களை காட்டிலும் அதிக சத்துக்கள் நிறைந்தது. மெக்னீசியம் கால்சியம் என மற்றதை விட 30 சதவீத சத்துக்கள் இதில் அதிகம்.

மக்கானா இதய நோய் வருவதை தடுக்க உதவும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனை அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும்.
இதற்கு முன்பு நாம் எடுத்து வைத்துள்ள ராகி மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளலாம்.
பின்பு அடுப்பில் வைத்துள்ள தண்ணீரில் கரைத்து வைத்துள்ள ராகி மாவை சேர்க்க வேண்டும்.
கட்டிகள் ஏதும் ஏற்படாதவாறு  கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.சற்று இறுகியதும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
எடுத்து வைத்துள்ள ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
மக்கானவையும்  சிறிதளவு எடுத்து வாணலில் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதனுடன் வெட்டி வைத்துள்ள ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கொண்டு மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க பேரிச்சம் பழத்தை சேர்க்க வேண்டும்.
பின்பு நாம் செய்து வைத்துள்ள ராகி கஞ்சி மற்றும் ஒரு டம்ளர் காய்ச்சிய பால் இவற்றையும் இதனுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாரத்தில் ஒரு முறை இந்த பானத்தை அருந்தினால் உடலில் மூட்டு வலி முதுகு வலி சம்பந்தமாக எந்த பிரச்சனையும் உண்டாகாது.