உள்நாக்கு வளர்ச்சியை ஸ்டாப் செய்ய இந்த கசாயம் ஒரே ஒருமுறை குடிங்க போதும்!!
குளிர்ந்த உணவுகள் உண்ணுதல்,சளி,இருமல் போன்ற காரணங்கள் உள்நாக்கு வீங்கி விடுகிறது.இதனால் உணவு சாப்பிடுவது,தண்ணீர் குடிப்பது போன்றவை மிகவும் கடினமாகிவிடும்.எனவே இந்த உள்நாக்கு வளர்ச்சியை கட்டுப்படுத்த மூலிகை கசாயம் செய்து குடித்து வாருங்கள்.
1)வில்வ இலை
2)துளசி
3)மஞ்சள் தூள்
4)தூதுவளை இலை
ஒரு பாத்திரத்தில் ஒரு வில்வ இலை,ஐந்து துளசி இலை,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் இரண்டு தூதுளை இலையை போடவும்.இதனை தொடர்ந்து 150 மில்லி தண்ணீரை எடுத்து அதில் ஊற்றவும்.
பிறகு அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் நீரை கொதிக்க விடவும்.150 மில்லி சுண்டி 100 மில்லியாக வரும் வரை கொதிக்கவிட்டு வடித்து அருந்தி வந்தால் உள்நாக்கு வளர்ச்சி கட்டுப்படும்.
1)புளி
2)உப்பு
ஒரு துண்டு புளியை உரலில் போட்டு மசித்துக் கொள்ளவும்.பிறகு இதை விரல் நுனியில் வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் தூள் உப்பில் அதை பிரட்டவும்.இவ்வாறு செய்த பின்னர் புளியை உள்நாக்கில் படும்படி வைக்கவும்.இப்படி செய்தால் உள்நாக்கு வளர்வது தடுக்கப்படும்.
1)கற்றாழை சாறு
ஒரு துண்டு கற்றாழையை தோல் நீக்கி விட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதை 2 அல்லது 3 முறை அலசி சுத்தம் செய்யவும்.ஒரு மிக்ஸி ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.
இந்த சாற்றை உள்நாக்கில் படும்படி வைத்தால் அதன் வளர்ச்சி கட்டுப்படும்.
1)பூண்டு
2)மஞ்சள்
முதலில் ஒரு பல் பூண்டை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடிக்கவும்.பின்னர் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.இதை சிறு உருண்டையாக பிடித்து உள்நாக்கில் படும்படி சாப்பிட்டால் அவற்றின் வளர்ச்சி தடுக்கப்படும்.