ஒரே வாரத்தில் BODY WEIGHT 3 Kg குறைய காலையில் இந்த பானம் பருகுங்கள்!!

Photo of author

By Divya

உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தால் உடல் பருமன்,இதய நோய்,கொலஸ்ட்ரால் பிரச்சனை,சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படக் கூடும்.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுப்படுத்த இஞ்சியில் செய்யப்பட்ட பானத்தை அருந்தி வாருங்கள்.

தேவைப்படும் பொருட்கள்..

1.இஞ்சி துண்டு ஒன்று
2.தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்..

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இஞ்சியை உட்கொள்ளலாம்.இஞ்சியில் நார்ச்சத்து,சோடியம்,புரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

இஞ்சியை வைத்து உடல் எடையை குறைக்கும் பானம் தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டிருக்கிறது.

முதலில் ஒரு சிறிய அளவு இஞ்சியை எடுத்து அதன் தோலை சீவிக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

தண்ணீர் சூடானதும் இஞ்சி சாறை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து குடித்தால் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடல் ஸ்லிம்மாக இருக்கும்.

தேவையான பொருட்கள்..

1)சுக்கு ஒன்று
2)தேன் ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்..

ஒரு துண்டு சுக்கை தோல் சீவிவிட்டு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்ததாக இடித்த சுக்கு சேர்த்து கொதிக்கவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை சுக்கு பானத்தில் சேர்த்து கலக்கி பருகவும்.இப்படி தொடர்ந்து பருகி வந்தால் உடல் எடை ஏறமால் இருக்கும்.