இன்று பலரும் வாயுத் தொல்லையால் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர்.துர்நாற்றத்துடனும் அதிக சத்தத்துடன் ஆசனவாய் இருந்து வாயுக்கள் வெளியேறுவதால் தர்ம சங்கடமான சூழல் ஏற்படுகிறது.வாயுத் தொல்லையில் இருந்து விடுபட பிரண்டையை ரசம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)பிரண்டை துண்டு – 1/4 கப்
2)தக்காளி – ஒன்று
3)மிளகு – ஐந்து
4)பூண்டு – இரண்டு பற்கள்
5)உப்பு – சிறிதளவு
6)சீரகம் – 1/4 தேக்கரண்டி
7)கடுகு – 1/4 தேக்கரண்டி
8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
9)புளி – ஒரு நெல்லிக்காய் சைஸ்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி கால் மணி நேரம் ஊற விடவும்.பிறகு ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பிரண்டையை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்ததாக இரண்டு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கி உரலில் சேர்க்கவும்.இதனுடன் மிளகு,சீரகம் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு கடுகு போட்டு பொரிய விடவும்.பிறகு இடித்து வைத்துள்ள பூண்டு கலவையை போட்டு வதக்கவும்.
அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.பிறகு பிரண்டை துண்டுகளை போட்டு வதக்கவும்.அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிச் சாறு சேர்த்து கலந்துவிடவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அடுப்பு தீயை குறைத்துக் கொள்ளவும்.இந்த ரசம் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.