சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!!

0
182
Drink this drink to keep your body super cool in summer!!
Drink this drink to keep your body super cool in summer!!

சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!!

தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலில் அதிகப்படியான சூடு உண்டாகும். சிலருக்கு அம்மை, சூட்டு கொப்பளம் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த உடல் சூட்டை முழுமையாக தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நன்னாரி சிரப்
2)ஐஸ்கட்டி
3)எலுமிச்சை சாறு
4)நாட்டு சர்க்கரை
5)சப்ஜா சீட்ஸ்

செய்முறை:-

முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சில நிமிடங்களுக்கு ஊற விடவும்.

அதன் பின்னர் ஒரு கிளாஸில் 2 தேக்கரண்டி நன்னாரி சிரப் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை மற்றும் ஊற வைத்த சப்ஜா சீட்ஸ் சேர்க்கவும்.

பிறகு அதில் தேவையான அளவு ஐஸ்கட்டி சேர்க்கவும். அதன் பின்னர் குளிர்ந்த நீர் ஊற்றி கலக்கவும். இந்த நன்னாரி சர்பத் உடல் சூட்டை தணிக்கும் பானமாக உள்ளது.

வெயில் காலம் தொடங்கி விட்டதால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவது மிகவும் முக்கியம். எனவே வாரம் 2 அல்லது 3 முறை நன்னாரி சர்பத் செய்து குடிப்பது நல்லது.

Previous articleவீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!
Next articleஇந்த பொருட்களை இப்படி பயன்படுத்தினால் எலிகள் உங்கள் வீட்டு பக்கமே அண்டாது!!