நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

Photo of author

By Divya

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

Divya

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குடலில் அதிக கெட்ட கழிவுகள் தேங்கி வாயுத் தொல்லை,வயிறு உப்பச பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவை பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.

எனவே உங்கள் மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.குடலில் துளியளவும் கழிவுகள் இருக்காது.

தேவையான பொருட்கள்:-

1)பிரஸ் கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜெல்லை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.

இந்த கற்றாழை ஜூஸை கிண்ணம் ஒன்றில் ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்த கற்றாழை ஜூஸ் செய்து குடித்து வந்தால் குடலில் உள்ள கெட்ட கழிவுகள் முழுமையாக வெளியேறி வயிறு சுத்தமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி
3)விளக்கெண்ணெய் – மூன்று துளி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை துண்டு எடுத்து அதில் இருந்து ஜெல்லை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த
கற்றாழை ஜெல்லை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த கற்றாழை ஜெல்லை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும்.அதன் பிறகு சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த கற்றாழை பானத்தை பருகினால் பெருங்குடலில் இருக்கின்ற கழிவுகள் அனைத்தும் அடித்துக் கொண்டு வெளியேறும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் குடல் கழிவுகள் வெளியேறும்.