உடல் கொழுப்பை குறைக்க இந்த ட்ரிங்க் குடித்து பாருங்க!! முப்பதே நாட்களில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

Photo of author

By Rupa

உடல் கொழுப்பை குறைக்க இந்த ட்ரிங்க் குடித்து பாருங்க!! முப்பதே நாட்களில் ரிசல்ட் கிடைத்துவிடும்!

உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகளவு உருவாகுவதால் பருமன்,மாரடைப்பு,இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.வயிறு,தொடை,கைகளில் தேங்கி இருக்கும் இந்த கொழுப்புகளை கரைக்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம்
2)இஞ்சி
2)எலுமிச்சை

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும்.

அதற்கு அடுத்து ஒரு சிறிய அளவிலான இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பின்னர் 3 அல்லது 4 எலுமிச்சை துண்டுகளை அதில் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் எடுத்து இந்த பானத்தை வடிகட்டி குடிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் முழுமையாக கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)கருஞ்சீரகம்
3)கசகசா

செய்முறை:-

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு 50 கிராம் கருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் 50 கிராம் வெந்தயம் மற்றும் 25 கிராம் கசகசாவை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொருட்களையும் நன்கு ஆறவிட்டு பொடியாக்கி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.பிறகு அரைத்த கருஞ்சீரக கலவை ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.இந்த பானத்தை குறைவான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.

உடல் பருமனால் அவதியடைந்து வருபவர்கள் இந்த ஒரு பானத்தை தொடர்ந்து குடித்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.