கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

Photo of author

By Divya

கல்லீரல் உறுப்பில் குவிந்து கிடக்கும் நச்சுக் கழிவுகள் வெளியேற.. இந்த ட்ரிங்க் குடிங்க!!

Divya

நம் உடலில் அளவில் பெரியதாக உள்ள உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும்.இந்த உறுப்பில் அதிகப்படியான அழுக்கு மற்றும் கொழுப்பு குவிந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே நமது கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த இரண்டு பானங்களில் ஒன்றை மட்டும் பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

கருஞ்சீரகம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டும் பொன்னிறமாக வறுபட்ட பிறகு அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த இரண்டு பொருளையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும.அதன் பிறகு அரைத்த கருஞ்சீரகம் மற்றும் ஓமப் பொடியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் பருக வேண்டும்.இப்படி தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கல்லீரலில் இருக்கின்ற அழுக்கு கழிவுகள் முழுமையாக நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

இந்த கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

இந்த கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

இந்த கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அகல இந்த கற்றாழை ஜூஸை பருகலாம்.