இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!! 

0
152

இதை குடித்தால் 3 நாட்கள் போதும்!! சளி இருமல் காய்ச்சல் குணமாகும்!!

நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது.

காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது.

மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் அந்த தொற்று நோய் உலகில் பல உயிர்களை கொன்று குவித்தது.

இந்நிலையில் தான் கபசுர குடிநீர் என்ற இயற்கை கஷாயம் அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கசாயத்தை கொரோனாவிற்கு மட்டுமின்றி சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலே குடிக்கலாம்.

 

மேலும் காய்ச்சல் இருமல் சளி போன்றவைகளை குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தலாம்.

தேவைபடும் பொருட்கள்

கற்பூரவள்ளி இலை

வெற்றிலை

இஞ்சி

சீரகம்

மிளகு

மஞ்சள் தூள்

முருங்கைக்கீரை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கற்பூரவள்ளி கற்பூரவள்ளி இலை வெற்றிலை சிறிதளவு இஞ்சி சீரகம் மிளகு மஞ்சள் தூள் முருங்கைக்கீரை இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கொதித்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் 10 நிமிடங்கள் அது நன்றாக கொதிக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் இதனை ஒரு டம்ளர் ஆகவும் 5 வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகள் அரை டம்ளர் ஆகவும் ஒரு வயது குழந்தைகள் ஒரு சங்கும் குடித்தால் போதுமான அளவாகும். இதனை குடிப்பதால் நெஞ்சு சளி அடியோடு வெளியேறும். மேலும் நெஞ்சு சளி வாந்தியாகவும் மலமாகவும் கரைந்து வெளிவரும்.

Previous articleகடுமையாக இடுப்பு வலி குணமாக!! இதனை தடவினால் போதும்!! 
Next articleHCL Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!