காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

Photo of author

By Divya

காலையில் இந்த மூலிகை கஞ்சி குடித்து உடல் கொழுப்புகளை சர்ர்ன்னு கரைத்துவிடுங்கள்!!

Divya

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.பார்லி கஞ்சி,பார்லி தண்ணீர் போன்றவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)பார்லி அரிசி – 50 கிராம்
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)மிளகு – கால் தேக்கரண்டி
4)இந்துப்பு – சிறிதளவு
5)பூண்டு பற்கள் – ஐந்து
6)கேரட் – ஒன்று
7)வெங்காயம் – ஒன்று
8)இஞ்சி – ஒரு துண்டு
9)பின்ஸ் – இரண்டு
10)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 50 கிராம் பார்லி அரிசியை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு தண்ணீரை வடித்துவிட்டு பார்லி அரிசியை ஒரு காட்டன் துணியில் போட்டு பரப்பிவிட வேண்டும்.

2.ஒரு மணி நேரம் காய்ந்த பிறகு அரிசியை வாணலியில் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பார்லி அரிசியை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.அடுத்து ஒரு முழு கேரட் மற்றும் இரண்டு பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பெரிய வெங்காயம்,ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஐந்து வெள்ளைப் பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

4.அதன் பிறகு அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பார்லி அரிசியை அதில் கொட்டி கிண்டிவிட வேண்டும்.அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி,கேரட் மற்றும் பீன்ஸ் துண்டுகளை அதில் போட வேண்டும்.

5.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி கருப்பு மிளகை போட வேண்டும்.இதற்கு அடுத்து குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்க வேண்டும்.இந்த பார்லி கஞ்சியை குடித்து வந்தால் உடலில் குவிந்து கிடக்கும் எல்டிஎல் கொழுப்பு கரைந்துவிடும்.

பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பார்லி கஞ்சி போல் பார்லி ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.