சாலை ஓரங்களில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் மூலிகையான சிறுகண்பீளை சிறுநீரக கற்களை குணமாக்க உதவுகிறது.இன்று பலருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருக்கிறது.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
இந்த சிறுநீரக கற்களை கரைக்க சிறுகண்பீளை மூலிகையை கீழ்கண்டவாறு பயன்படுத்தி வரலாம்.
தேவையான பொருட்கள்:
1)சிறுகண்பீளை பொடி ஒரு தேக்கரண்டி
2)தேன் ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சம் பழ சாறு ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் ஒரு கப்
செய்முறை:
சிறுகண்பீளை மூலிகை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை 100 கிராம் அளவிற்கு பொடியாக வாங்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு சிறுகண்பீளை பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து அரை கப் அளவிற்கு வரும் வரை சுண்டக் காய்ச்சவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 48 நாட்களுக்கு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)சிறுகண்பீளை பொடி ஒரு தேக்கரண்டி
2)சீரகம் ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் இரண்டு டம்ளர்
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சிறுகண்;பீளை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.
தேவையான பொருட்கள்:
1)சிறுகண்பீளை வேர் சிறிதளவு
2)பசும் பால் 50 மில்லி
3)பனங்கற்கண்டு சிறிதளவு
செய்முறை:
சிறுகண்பீளை வேர் சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு சிறிதளவு காய்ச்சாத பால் சேர்த்து அரைக்கவும்.அதன் பிறகு சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து வடிகட்டி பருகினால் சிறுநீரகத்தில் உள்ள மொத்த கற்களும் கரைந்துவிடும்.