இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

Photo of author

By Kowsalya

இரத்தம் சுத்தமாகும்! ஹீமோகுளோபின் அதிகரிக்கும்!

Kowsalya

உங்கள் உடம்பில் ரத்தம் இல்லையா? ஒரு வாரம் இதனை விடாமல் குடித்து வாருங்கள். ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த இயற்கை வழியை வாருங்கள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. கேரட் ஒன்று

2. பீட்ரூட்

3. மண்டை வெல்லம்

4. எலுமிச்சை பழச்சாறு

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. அது ஒரு கேரட்டை எடுத்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

3. பின் அரை பீட்ரூட்டை எடுத்து தோல் நீக்கி கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

4. தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

5. இப்பொழுது இதனை வடிகட்டிக் கொள்ளவும்.

6. இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்.

7. பின் கடையில் மண்டை வெல்லம் என்று வாங்கிக் கொள்ளுங்கள். அதன் இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.

8. அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கிக் கொள்ளவும்.

 

இப்பொழுது இதனை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் குடித்து வரும் பொழுது உங்களது ஹீமோகுளோபினின் அளவு கண்டிப்பாக உயர்ந்திருக்கும். ஹீமோகுளோபின் அளவை பரிசோதனை செய்து பாருங்கள்.மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.