உடலில் உள்ள சிறுநீரகம் இரத்தத்தை சுத்தம் செய்வது,கழிவுகளை திரவ வடிவில் வெளியேற்றுவது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது.அப்படி இருக்கையில் சிறுநீரகத்தில் நச்சுக் கழிவுகள் படிந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்துவிடும்.எனவே சிறுநீரகத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் அகல கீழ்கண்ட ஜூஸ் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)பீட்ரூட் – ஒன்று
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த பீட்ரூட் சாறை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வந்தால் சிறுநீரக செயல்பாடு மேம்படும்.
தேவையான பொருட்கள்:-
1)கேரட் – ஒன்று
2)இஞ்சி துண்டு – ஒரு பீஸ்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
**ஒரு முழு கேரட்டை எடுத்து தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த கேரட்டை நீரில் போட்டு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
**பிறகு ஒரு துண்டு இஞ்சி எடுத்து மேல் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு மிக்சர் ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள கேரட் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து இஞ்சி துண்டை போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
**இந்த கேரட் ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.சிறுநீரகத்தில் தேங்கிய நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேற இந்த கேரட் இஞ்சி ஜூஸ் பருகலாம்.
**எலுமிச்சை ஜூஸை தினமும் பருகி வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும்.வெது வெதுப்பான தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் நீங்கி சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.
**சிறிது செலரியை மிக்சர் ஜாரில் போட்டு இஞ்சி துண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இதை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.