பெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!

0
2350

மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் பெருங்குடலில் மலக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து மலச்சிக்கலை உண்டாக்குகிறது.இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.

 

மலச்சிக்கலுக்கு உரிய வீட்டு வைத்தியங்கள்:

 

தேவையான பொருட்கள்:-

 

1)கற்றாழை மடல் – ஒன்று

2)தண்ணீர் – ஒரு கப்

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் கற்றாழை செடியில் இருந்து ஒரு மடலை கட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக பிரித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

 

பிறகு அதில் த்ண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறை அலசி சுத்தம் செய்து மிக்சர் ஜாரில் போடுங்கள்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)கொத்து அவரை – ஐந்து

2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

3)விளக்கெண்ணெய் – 3 சொட்டு

 

செய்முறை விளக்கம்:

 

முதலில் ஐந்து கொத்து அவரைக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

 

பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி மூன்று சொட்டு விளக்கெண்ணெய் சேர்த்து பருகினால் குடலில் இறுகி கிடக்கும் மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேயிலை தூள் – அரை தேக்கரண்டி

2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

3)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அரை தேக்கரண்டி தேயிலை தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Previous articleகண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!
Next articleஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!