பெண்கள் தைராய்டு,PCOS பிரச்சனையை எதிர்கொள்வது அதிகரித்து வருகிறது.இதனால் உடல் எடை அதிகரித்து பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே PCOS பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க பெரிய நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.இந்த நெல்லிக்காயில் ஜூஸ் செய்து குட்டித்தால் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – 10
2)தண்ணீர் – ஒரு கப்
3)சீரகம் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
நீங்கள் 10 பெரிய நெல்லிக்காய் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விதையை மட்டும் நீக்கிவிட வேண்டும்.
பிறகு கால் தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்சர் ஜாரில் பெரிய நெல்லிக்காய் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சீரகத் தூளை அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.
சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அகல நெல்லிக்காய் ஜூஸ் செய்து பருகலாம்.நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.
நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் சளி,இருமல் பிரச்சனை நீங்கும்.நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தைராய்டு,PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் இந்த நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.