1 நாளில் இந்த வறட்டு இருமலை போக்க இதனை ஒரு முறை மட்டும் குடியுங்கள்!!

Photo of author

By Rupa

1 நாளில் இந்த வறட்டு இருமலை போக்க இதனை ஒரு முறை மட்டும் குடியுங்கள்!!

சளி மற்றும் காய்ச்சலை விட பெரும்பாலானோர் இந்த வறட்டு இருமல் தான் அதிக அளவு பாதிப்படைவர் ஏனென்றால் தொடர் இருமலால் நெஞ்சம் மற்றும் வயிறு வலி எடுக்க ஆரம்பித்து விடும் அத்தோடு தொண்டை பகுதியில் ஏதோ ஒன்று அறுப்பது போலவே இருக்கும். சளி காய்ச்சல் வந்தால் கூட ஓரிரு நாட்களில் குணமாகிவிடும் இந்த இருமல் நிற்பதற்கு குறைந்தபட்சமாக நான்கு நாட்கள் கூட ஆகிவிடுகிறது இதனை எளிமையாக வீட்டு வைத்தியம் முறையில் சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
தேன்
மஞ்சள்
மிளகு

தேனில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் தொண்டைக்கு சற்று இதமாக இருக்கும். மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படும் ஓர் பொருள். மிளகானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செய்முறை:
ஒரு கிளாஸ் சுடுதண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் மிளகுத்தூள் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும்.
அந்த தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே கொடுத்து விட வேண்டும்.
இதனை குடிப்பதால் நமது உடலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி தொண்டை பகுதியில் இருக்கும் கிருமிகள் நீக்கப்பட்டு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

டிப்ஸ்:2
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு
தேன்
விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாரானது எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் தன்மையுடையது. நமது உடம்பில் ஓர் ஆன்ட்டி பாக்டீரியா வகவும் செயல்படுகிறது.
இருமலை குணமாகும் தன்மையானது எலுமிச்சைக்கு அதிகம் உள்ளது.
உடலில் உள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நமது உடலில் உள்ள அலர்ஜியை நீக்க தேனின் பங்கு அதிகம்.

செய்முறை:
ஒரு கப்பில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருமல் குணமாகும் வரை இவற்றை தினந்தோறும் 4 முறைக்கு மேல் சாப்பிட்டு வர வேண்டும்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் ஓரிரு நாட்களில் குணமாகும்.