கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்! 

0
234
#image_title

கெட்ட கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம் குறைய தொடர்ந்து 2 வாரம் இதை வெறும் வயிற்றில் குடிச்சு பாருங்க!  நீங்களே அசந்து போவீர்கள்! 

உடம்பில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக இருப்பார்கள் இந்த பானத்தை தொடர்ந்து இரண்டு வாரம் குடித்து வந்தாலே போதும். உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தும் கரைந்து போய்விடும்.

அதுமட்டுமில்லாமல் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சளி இருமலால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரித்தாலே நாம் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய கொழுப்பை குறைக்கக்கூடிய பானத்தை பற்றி பார்ப்போம்.

** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி சேர்க்கவும்.

**  இஞ்சி நமது உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை நீக்கும். இதில் உள்ள ஜின்ஜரால் என்னும் பொருள் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.

** அடுத்ததாக இதில் 4 பூண்டு பற்களை தோல் உரித்து தட்டி சேர்த்துக் கொள்ளவும். இது சிறிது கொதித்ததும் இறக்கி ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ளவும்.

** பின்னர் சூடு சற்று ஆறியதும் இதில் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். அடுத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். தற்போது பானம் தயார்.

இந்த பானத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மட்டுமே இதைக் குடிக்க வேண்டும். இதனால் உங்களது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இருப்பதை காணலாம்.

மேலும் இந்த பானத்தை குடிக்கும் பொழுது உணவிலும் கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான ரிசல்ட் கிடைக்கும்.

Previous articleசிறுவயதிலேயே இளநரை பிரச்சனையா!! தேங்காய் எண்ணெயுடன் இதை மட்டும் சேருங்கள்!!
Next articleநிதானம் இல்லாமல் 6 வயது மகளை வெட்டி கொன்ற கொடூர தந்தை! தலைக்கேறிய போதையால் நேர்ந்த விபரீதம்!