ஒற்றைத் தலைவலியை அடித்து விரட்ட இதனை ஒரு முறை குடியுங்கள்!!

Photo of author

By Rupa

ஒற்றைத் தலைவலியை அடித்து விரட்ட இதனை ஒரு முறை குடியுங்கள்!!

ஒற்றைத் தலைவலி ஆனது அதிக அளவு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு எளிதில் வந்துவிடும். அதிகளவு நாம் பிரஷர் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நமது மூளையில் நரம்பியல் கடத்தியும் மாற்றம் உண்டாகும். இது நாளடைவில் ஒற்றை தலைவலியாக மாறிவிடுகிறது.

குறிப்பாக இது கேட்கும் ஒலி மற்றும் அதிகளவு வெளிச்சம் உள்ளிட்டவைகளாலும் வருகிறது. மேற்கொண்டு ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் குமட்டல் பசியின்மை கண்களில் வலி போன்றவை காணப்படும். இதனை எளிமையான முறையில் இயற்கை வைத்தியத்தில் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
சதாவரி
சுக்கு
அமுக்கிரா
திப்பிலி
தாமரைப்பூ
மிளகு
அக்கிரகாரம்

இவை அனைத்தும் தனித்தனியாக 5 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சித்தரத்தை

இதனை மட்டும் 10 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கொடுக்கப்பட்ட அளவுகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக தூள் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை அடுப்பில் வைத்து கொதித்து வரும் வேளையில் நாம் அரைத்து வைத்துள்ள தூளை சேர்க்க வேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின்பு தேவையான அளவு நாட்டுச்சக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை ஒரு நாளில் காலை மற்றும் மாலை என குடித்து வர ஒற்றைத் தலைவலி முற்றிலும் குணமாகும்.