இதை 1 தடவை மட்டும் குடியுங்கள்! கை கால் முழங்கால் வலி மாயமாகும்
நீங்கள் முழங்கால் வலி, கை வலி, கால் வலி, நரம்பு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா. இந்த பதிவில் சொல்வதை அப்படியே செய்து பாருங்கள். இனி உங்களுக்கு முழங்கால் வலி, கை வலி, கால் வலி பிரச்சனைகள் இருக்காது.
கால் வலி கை வலி முழங்கால் வலி குறைய வீட்டு வைத்தியம்
இதற்கு முதலில் நான்கு கருப்பு மிளகை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து அரைத்த இஞ்சி விழுதில் அரை டீஸ்பூன் சேர்த்து மிளகு பொடியையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நீண்ட நேரம் கொதிக்க வைக்க கூடாது. ஏனென்றால் பொடியாக சேர்த்த மிளகும், விழுதாக சேர்க்கப்பட்டுள்ள இஞ்சியும் விரைவாகவே அதன் சத்துக்கள் பாலில் கலந்து விடும். அதனால் மூன்றிலிருந்து ஐந்து நிமிடம் வரை கொத்திக்க வைத்தால் போதும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வெது வெதுப்பாக வரும் வரை ஆற வைத்து பிறகு அதை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில் சிறு துண்டு கற்கண்டு சேர்த்து பருகலாம்.
இதனால் தூக்கமின்மை, சோர்வு, கீழ் வாதம், கை வலி, கால் வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் இருக்காது. இத்துடன் சிறிது நல்லெண்ணெய் எடுத்து வலி இருக்கும் பகுதிகளில் தேய்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
அதிக வலி இருப்பவர்கள் இதை தொடர்ந்து மூன்று நாளுக்கு தயார் செய்து குடிக்க வேண்டும். மேலும் அதிகாலையில் வெயிலில் 10 நிமிடங்கள் நின்றால் வெயிலில் இருக்கும் விட்டமின் டி நம் உடலுக்கு அதிக அளவில் கிடைக்கின்றது.
இந்த விட்டமின் டி நம் உடலில் உள்ள வலிகள் குறைய அதிகம் தேவைப்படுகிறது. வலி குறைய வேண்டும் என்றால் குறைந்தது 15 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும். இன்னும் நல்லெண்ணெய்யை தேய்த்து விட்டு வெயிலில் நின்றால் இன்றும் பலன் கிடைக்கும்.