அடிக்கும் வெயிலுக்கு ஐஸ்க்ரீம்,கூல் ட்ரிங்க்ஸ் போன்ற செயற்கை பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவை சுவையாகவும்,குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மோசமாகிவிடும.
எனவே இயற்கை முறையில் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை அதிகமாக சாப்பிடுங்கள்.இளநீர்,நுங்கு,நன்னாரி சர்பத்,சப்ஜா நீர்,தர்பூசணி சாறு,முலாம் பழச்சாறு போன்றவை உடல் சூட்டை தணிக்கும்.
அதேபோல் வெண் பூசணியில் நீர்ச்சத்து அளவிற்கு அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த வெண் பூசணியை அரைத்து குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.
கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து,வைட்டமின்கள்,பொட்டாசியம்,நார்ச்சத்து ஆகியவை அதிகம் நிறைந்து காணப்படும் வெண் பூசணியை ஜூஸ் செய்து சாப்பிட்டால் சரும நோய்கள் அகலும்.இந்த வெண் பூசணியை அரைத்து பருகினால் குடல் புண்கள் குணமாகும்.
வெண் பூசணியை அரைத்து தோல் தடவி குளித்தால் வெயில் கொப்பளம்,வியர்க்குரு போன்ற பாதிப்புகள் குணமாகும்.வெண் பூசணி சாறு பருகினால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.அல்சர் புண்களை குணமாக்கும் அருமருந்து சாம்பல் பூசணி.
இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சீராக்க வெண் பூசணி சாறு குடிக்கலாம்.கெட்ட கொழுப்புகளை கரைத்து தள்ளும் மூலிகை பானமாக வெண் பூசணி ஜூஸ் திகழ்கிறது.சிறுநீரக கல் மற்றும் சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு இருந்தால் இந்த வெண் பூசணியை கொண்டு ஜூஸ் செய்து குடிக்கலாம்.
வெண் பூசணி சாறு குடித்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை குணமாக செரிமான பாதிப்பு சரியாக வெண் பூசணி சாறு செய்து குடிக்கலாம்.