இன்று அனைவருக்கும் ஒரு பிரச்சனை பொதுவாக இருக்கிறது என்றால் உடல் பருமன் தான். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அதற்கு காரணம் நம் உணவுப் பழக்கங்களும் பழக்க வழக்கங்களும். அதிகமான கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேபோல் உடல் உழைப்பின்மை காரணம். ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணியாகும்.
எவ்வளவுதான் முயற்சித்து பார்த்தாலும் தொப்பை குறைய வில்லையே என்று நினைப்பவர்கள், ஒரு நாளில் இரண்டு முறை இதை குடிப்பதன் மூலம் வாரம் 2 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைக்கலாம். அது என்னவென்றால் வாருங்கள் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. பூண்டு
2. எலுமிச்சைப் பழச்சாறு
3. தேன்
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. கொதிக்க வைத்த நீரை ஒரு டம்ளரில் ஊற்றவும்.
3. இது அரை எலுமிச்சைப் பழச்சாறு பிழிந்து கொள்ளவும்.
4. பின் 3 பல் பூண்டை எடுத்து தோல் உரித்து ஊரலில் நசுக்கி தண்ணீரில் போடவும்.
5. பின் இதை 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.
6. 5 நிமிடம் கழித்ததும் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து கலந்து பருக ஆரம்பிக்கலாம்.
7. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலையிலும் டீ காபிக்கு பதிலாக இதனை பருக வேண்டும்.
8. இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர 2 கிலோ அளவிற்கு தொப்பை குறையும்.