இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் மாதம் 10 கிலோ குறைக்கலாம்!

Photo of author

By Kowsalya

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்களே இருக்க முடியாது. அதற்கென்று உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்வது என பல்வேறு முறைகளை பயன்படுத்தியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் வாடுபவர்களே உள்ளனர்.‌

இந்த இயற்கை முறை எந்த ஒரு மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. நமது வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே நம் உடம்பில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பத்து கிலோ அளவிற்கு குறைக்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சீரகப்பொடி-1 ஸ்பூன்

2. பட்டை தூள் கால் ஸ்பூன்

3. இஞ்சிப் பொடி அரை ஸ்பூன்

4. எலுமிச்சை தோல் இரண்டு துண்டு

5. தேன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரை லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

3. நன்கு அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

4. கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

5. நல்ல சூடாக இருக்கும் தண்ணீரில் மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் சீரகப்பொடி, பட்டைத் தூள், இஞ்சி பொடி, எலுமிச்சை பழத்தோல் 2 ஆகியவற்றை போட்டு நன்கு ஊற வையுங்கள்.

6. பொருட்களின் சாறு நன்கு தண்ணீரில் இறங்கியவுடன் வடிகட்டி மிதமான சூட்டில் இருக்கும் பொழுது பருகி வாருங்கள்.

7. சுவைக்காக வேண்டுமென்றால் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

8. இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

9. கட்டாயம் நல்ல தீர்வு கிடைக்கும்.‌