மோசமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது கடுமையான வாயுத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது.இந்த வாயுத் தொல்லையை கட்டுப்படுத்த முருங்கை கீரையில் ஒரு மருத்துவ குணம் நிறைந்த பானம் தயாரித்து பருகலாம்.
அதிக மருத்துவ குணம் கொண்டிருக்கும் முருங்கை கீரையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஏரளமான நன்மைகள் கிடைக்கும்.முருங்கை கீரை பானம் வயிறு வலி,இரும்புச்சத்து குறைபாடு,கண் பார்வை குறைபாடு,மாதவிடாய் வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது.இந்த முருங்கை கீரையில் சூப் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை – ஒரு கைப்பிடி
2)பூண்டு பல் – இரண்டு
3)மிளகு – பத்து
4)வெந்தயம் – கால் தேக்கரண்டி
5)ஓமம் – கால் தேக்கரண்டி
6)பெருங்காயம் – சிட்டிகை அளவு
7)உப்பு – சிறிதளவு
8)சீரகம் – கால் தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
செய்முறை 01:
முதலில் ஒருகைப்பிடி முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
செய்முறை 02:
பின்னர் மிக்சர் ஜாரில் பத்து மிளகு,கால் தேக்கரண்டி சீரகம்,கால் தேக்கரண்டி ஓமம்,கால் தேக்கரண்டி வெந்தயத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை 03:
இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு அடுத்து முருங்கை கீரை,பூண்டு பற்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை 04:
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த முருங்கை கீரை விழுதை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அரைத்து வைத்துள்ள சீரக கலவை பொடியை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.
செய்முறை 05:
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.இந்த பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
செய்முறை 07:
இந்த முருங்கை பானத்தை தொடர்ந்து காலை நேரத்தில் பருகி வந்தால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.