காலை வேளையில் இந்த டீ செய்து குடித்து மனக்கவலைக்கு குட் பாய் சொல்லுங்கள்!!

0
71
Drink this tea in the morning and say goodbye to anxiety!!
Drink this tea in the morning and say goodbye to anxiety!!

இக்காலத்தில் மனக்கவலை இல்லாமல் வாழ்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.பணிச்சுமை,குடும்ப பிரச்சனை,பணம் சம்மந்தபட்ட பிரச்சனை,வேலைவாய்ப்பின்மை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம்,மனக்கவலை ஏற்படுகிறது.

சிலருக்கு அதிகப்படியான மனக்கவலை மற்றும் மன அழுத்தம் பேர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறிவிடுகிறது.தாங்க முடியாத மன உளைச்சல் மற்றும் மனக் கவலையால் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே மனக் கவலையை துரத்தி அடிக்க துளசி மற்றும் ஏலக்காய் டீ செய்து செய்து பருகி வாருங்கள்.

துளசி டீ செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி துளசி இலைகளை போட்டு காய்ச்சி வடிகட்டி பருகி வந்தால் மனக்கவலை நீங்கும்.

ஏலக்காய் டீ செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு ஏலக்காயை தட்டி போட்டு கொதிக்க வைத்து வடித்து பருகினால் மன அழுத்தம்,மனக்கவலை நீங்கும்.

சீரக டீ செய்முறை:

உரலில் கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு துண்டு வெல்லம் போட்டு இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் மன அழுத்தம் நீங்கும்.

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சை எண்ணெய் கலந்த நீரில் குளித்து வந்தால் மனம் புத்துணர்ச்சியாக இருக்கும்.அதேபோல் பெப்பர் மின்ட் எண்ணெயை நீரில் கலந்து குளித்து வந்தால் மன அழுத்தம் நீங்கும்.

மேலும் தினமும் தியானம்,யோகா,உடற்பயிற்சி செய்து வந்தால் மன உறுதி அதிகமாகும்.தங்களுக்கு பிடித்த வேலைகளை கவனம் செலுத்தினால் மனக் கவலை குறையும்.

Previous articleசிவகார்த்திகேயன் சூரி இடையே என்ன பாண்டிங்!!
Next articleபித்தப்பையில் எவ்வளவு பெரிய கல் இருந்தாலும்.. இதை செய்தால் ஒரே வாரத்தில் கரைந்துவிடும்!!