இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

Photo of author

By Kowsalya

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை முற்றிலுமாக சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வழிவகுக்கும்.

அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 7 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் வரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

ஓமம்:

ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை தீரும். மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியை குறைக்கும்.

சீரகம்:

ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உங்களை அண்டாது.

பார்லி:

ஒரு டீ ஸ்பூன் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் காய்ச்சி இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, அடுத்த நாள் காலையில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் சிறுநீர் வழியே வெளியேறும்.

கொத்தமல்லி விதை:

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து இரவு முழுவதும் ஊற வேண்டும். பின்னர் இந்த தண்ணியை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

அருகம்புல்:

அருகம்புல் பொடியை அல்லது அருகம்புல் சாற்றை ஒரு டம்ளர் அளவு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலில் செயல்பாடு அதிகரிக்கும்.

வெந்தயம்:

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, இரவு முழுவதும் அந்த தண்ணீர் ஊறி, காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது தேவையற்ற கொழுப்பை குறைக்கலாம்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கைத் நான்காக வெட்டி ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்து வரும் போது உடலின் ஆற்றலையும் சக்தியையும் அதிகரிக்கும்.